ஆண்கள் முகத்துல வயசு தெரியாம இளமையா இருக்க இந்த 10 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க!*

ஆண்கள் இளமையான தோற்றத்தை கொண்டிருக்க விரும்பினால் பெண்களை போன்று சில பராமரிப்புகள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆண்களுக்கு 30 வயதாகும் போது முகத்தில் புள்ளிகள், கோடுகள் தோன்ற தொடங்குகிறது.



வயதான தோற்றம் ஆண்களை மேலும் வயதானவர்களாக்கி காட்டும். தோற்றம் இளமையாகவும் சருமம் அழகாகவும் இருக்க ஆண்கள் சில குறிப்புகளை பின்பற்ற வேண்டும். இது விரைவாக பலன் அளிக்கும் என்பதோடு நீண்ட காலம் உங்களை இளமைத்தோற்றத்தோடும் வைத்திருக்கும்.


நன்றாக தூங்குங்கள்

தூக்கம் ஒரு நாள் இரண்டு நாள் இல்லையெனில் அது அதிக வித்தியாசத்தை அளிக்காது. ஆனால் நீண்ட நாட்களாகவே போதுமான தூக்கம் இல்லையெனில் அது சரும பாதிப்பையும் உண்டாக்கும்.

போதுமான தூக்கம் மனதை உற்சாகமாக வைத்து புதிய தோல் செல்கள் உருவாக உதவும். தூக்கத்தில் சருமம் தன்னை புதுப்பித்து கொள்ள உதவுகிறது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள் உருவாவது குறைந்து கண்களுக்கு கீழ் இரப்பை வீக்கம் உருவாகாமல் தடுக்கிறது.

புகைப்பழக்கத்தை தவிருங்கள் அல்லது கட்டுப்படுத்துங்கள்.

புகைப்பிடிப்பது தலைமுடி மற்றும் பற்கள், சருமத்தையும் பாதிக்கிறது. இது பல ஆண்டுகள் உங்களை வயதானவராக காண்பிக்கும். ஏனெனில் இது கார்பன் மோனாக்ஸைடு அடக்கியுள்ளதால் சருமத்தில் உள்ள ஆக்ஸிஜனை குறைத்து சருமத்தை உலர்த்தும்.

வைட்டமின் சி குறைவு திசு, எலாஸ்டின் மற்றும் கொலாஜன் உள்ளிட்ட இளமை தோற்றத்தை அழிக்க செய்யும். மேலும் புகைப்பழக்கம் பல முக்கிய கூறுகளையும் அழிக்கிறது. அதனால் புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்துவது தவிர்ப்பது நல்லது.

தண்ணீர் அதிகமாக குடியுங்கள்

ஆண்கள் வயதான எதிர்ப்பு தோல் பராமரிப்பை செய்து கொள்ள விரும்பினால் முதலில் உடலை நீரேற்றமாக வைத்திருங்கள்.

நாள் ஒன்றுக்கு குறைந்தது 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். இது சருமத்தை ஒளிர செய்யும். மேலும் இது ஆரோக்கியமான சருமத்தை வைக்கும். இது உங்கள் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது. சுருக்கங்களை தவிர்த்து இளமையாக காட்டும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வதால் இதய ஆரோக்கியம் போன்று சரும ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது இதனால் வழக்கத்தை விட எப்போதும் இளமையான தோற்றத்தை அளிக்கிறது. வழக்கமான உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை தூண்ட செய்கிறது.

அதிக ஊட்டச்சத்துகளும் ஆக்ஸிஜனும் உடலில் அனைத்து இடங்களுக்கும் செல்வதால் சருமத்தில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல் வெளியேற்றப்படுகிறது. தோல் வயதான அறிகுறிகளை குறைக்கிறது. உடற்பயிற்சி செய்யும் ஆண்கள் கொழுப்பு மற்றும் மந்தமான ஆண்களை காட்டிலும் இளமையாக இருப்பார்கள் என்று ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.


சூரியனிடமிருந்து சருமத்தை பாதுகாத்துகொள்ளுங்கள்

தினசரி 15 முதல் 20 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் இருப்பது நல்லது. ஆனால் அதை காட்டிலும் அதிக நேரம் சூரிய ஒளியில் இருந்தால் நீங்கள் சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். இது சருமத்தை பாதித்து சுருக்கங்களை விரைவுப்படுத்துகிறது. புற ஊதாக்கதிர்கள் சருமத்தில் உள்ள எலாஸ்டின் இழைகளை சேதப்படுத்தும்.

சருமத்துக்கு நெகிழ்ச்சியை கொடுக்கும் திசுக்களை பாதிக்கும். இயன்றவரை சருமத்தை மறைக்கும் வகையில் ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள் வெயிலில் செல்வதற்கு முன்பு எஸ்பிஎஃப் உடன் சன்ஸ்க்ரீன் 15 நிமிடங்களுக்கு முன்பு பயன்படுத்துங்கள்.

சரும பராமரிப்பு செய்யுங்கள்

சருமத்துக்கு வழக்கமான சுத்திகரிப்பு முறை, க்ளென்சிங் செய்வது, மாய்சுரைசர் செய்வது, டோனிஞ் செய்வது போன்ற பராமரிப்பு முறைகள் அவசியம். கிளைகோலிக் அமிலத்தால் சருமத்தை சுத்தம் செய்யுங்கள். இறந்த சரும செல்கள் மற்றும் அதிகப்படியான சருமத்தை சுத்தம் செய்யுங்கள்.

சுத்தம் செய்த பிறகு மாய்சுரசைர் பயன்படுத்துங்கள். இது சருமத்தை உறுதியாக இருக்க வைக்கும். பிறகு சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கும்.

ரெட்டினோல், கோஎன்சைம், வைட்டமின் சி நிறைந்த மாய்சுரைசர் பயன்படுத்துங்கள். இது கொலாஜன் உற்பத்தியை தூண்ட உதவுகிறது. மேலும் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்க செய்கிறது.


தாடியை வளருங்கள்


உங்களுக்கு தாடி வளர்ப்பதில் விருப்பம் இருந்தால் அடர்த்தியாக வளர செய்யுங்கள். உங்கள் தாடியில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் மற்றும் மயிர்க்கால்கள் சருமத்தை அடர்த்தியாகவும் சேதப்படுத்துவதை எதிர்க்கவும் செய்கின்றன.

இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துகொள்ள உதவுகின்றன. சருமம் வறட்சியாகாமல் தடுக்கப்படுவதால் இளமையான தோற்றம் பெறலாம்.


புருவங்களை அழகுப்படுத்துங்கள்

புருவ அழகு பெண்களை போன்று ஆண்களுக்கும் உண்டு. வடிவமைக்கப்பட்ட தெளிவான வளைந்த புருவங்கள் புதிய மற்றும் இளமை முகத்தின் தோற்றத்தை அளிக்கின்றன. உங்கள் வயதான தோற்றம் நீண்ட காலம் தள்ளிப்போக புருவங்களை அழகுப்படுத்த செய்யுங்கள். இது குறித்து அழகு பராமரிப்பு நிபுணரிடம் ஆலோசனை பெறலாம்.


பழங்கள் மற்றும் காய்கறிகள்

காய்கறிகளில் டர்னிப்ஸ், கீரைகள், ப்ரக்கோலி, கேரட் மற்றூம் தக்காளி போன்றவற்றை அதிகமாக சேருங்கள். அவகேடோ, பப்பாளி, முலாம்பழம் போன்ற சரும உயிரணு சவ்வுகளை பாதுகாக்கும் பழங்களை அவ்வபோது சேருங்கள். இது புற ஊதாக்கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கும்.

அதோடு கீரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பட்டாணி, பீன்ஸ் மற்றும் சருமத்தை புதுப்பிக்கும் காய்களை சேர்க்கவும். இது கொலாஜன் உருவாவதை பராமரிக்க உதவுகிறது.

அதே போன்று பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், பப்பாளி, கிவி, கொய்யா போன்றவை வைட்டமின் சி நிறைந்தவை. இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. சருமத்தை ஆரொக்கியமாக வைக்க உதவுகிறது. உணவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துகொள்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.


ஆண்களுக்கான அழகு பராமரிப்பு பொருள்கள்

ஆண்கள் சருமப்பராமரிப்புக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் அனைத்தையும் பிரத்யேகமாக ஆண்களுக்கானதை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் பெண்களை காட்டிலும் ஆண்களின் சருமமானது கடினமாக இருக்கும். ஆண்களின் செபாசியஸ் சுரப்பிகள், இரத்த நாளங்கள் அதிக செறிவு மற்றும் சருமமானது பெண்களின் தோலை விட கடினமானது.

அதற்கேற்ற பராமரிப்பு பொருள்களை பயன்படுத்த வேண்டும். உங்கள் சருமத்துக்கேற்ற பராமரிப்பு பொருள்களை கண்டறிய தோல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். அதோடு வயதான எதிர்ப்பு குறிப்புகள் குறித்தும் நீங்கள் ஆலோசனை பெறலாம்.

Post a Comment

أحدث أقدم