வாராக்கடன் அதிகரிக்கும்.. பயத்தில் மூலதனத்தினை திரட்ட வங்கிகள் திட்டம்..!
தனியார் துறை வங்கிகள் தங்கள் மூலதனம் திரட்டும் முயற்சிக்கு பிறகு, மூன்றில் இரண்டு பங்கு வைப்பு தொகை மற்றும் வங்கியின் முன்னேற்றங்களைக் கட்டுப்படுத்தும் பொதுத்துறை வங்கிகளும் தற்போது அந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
ஏனெனில் பொதுத்துறை வங்கிகள் 6 மாத இஎம்ஐக்கான கால அவகாசம், கொடுக்கப்பட்டுள்ள நிலையில், வாராக்கடன் அதிகரிப்பு மற்றும் மூலதனம் அரிப்பால் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இருக்கும் நிலையில், பொதுத்துறை வங்கிகள் மூலதனத்தினை பெற அரசும் சரியான நிலையில் இல்லை. அதற்கான வாய்ப்புகளும் மிக குறைவே.
நிதி திரட்ட திட்டம் இதற்கிடையில் வங்கிக் கட்டுப்பாட்டாளர் ரிசர்வ் வங்கி, கொரோனாவினை கருத்தில் கொண்டு, வணிக வங்கிகளை மூலதனங்களை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. முன்னதாக எந்தவொரு மூலதனத்தினையும் திரட்ட திட்டம் இல்லை என்று கூறிய, நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தற்போது 25,000 கோடி ரூபாய் மூலதனத்தினை திரட்ட திட்டமிட்டுள்ளது.
ஐடிபிஐ வங்கி நிதி திரட்ட திட்டம் எல்ஐசி முதலீட்டாளராக இருக்கும் ஐடிபிஐ வங்கி 11,000 கோடி ரூபாய் மூலதனத்தினை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதே பெங்களுருவினை தலைமையிடமாகக் கொண்ட, கனரா வங்கி மற்றும் சென்ட் ரல் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் 5,000 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளது.
தனியார் வங்கிகளை போல் நிதி திரட்ட முடியாது இதே பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது தற்போது போதுமான நிதி மூலதனத்துடன் இருப்பதால், இந்த ஆண்டில் இறுதியில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஆனால் தனியார் வங்கிகளைப் போல் பொதுத்துறை வங்கிகளில் நிதியினை திரட்ட முடியாது என்றும் கூறப்படுகிறது. பங்கு சந்தைகளில் பொதுத்துறைகளின் மதிப்பீடுகள் மிகக் குறைவே.
மறுமூலதனம் பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் மூலதனத்திற்காக அரசினை சார்ந்துள்ளது. சமீப காலமாக அரசாங்கம் மூலதனத்தினை திரட்ட மறுமூலதன பத்திர வழியை பயன்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் அரசு 3.08 லட்சம் கோடி ரூபாயினை கொடுத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மறுமூலதன பத்திர வழியை பயன்படுத்தி 2.11 லட்சம் கோடி ரூபாய் நிதியினை அரசு செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாராக்கடன் அதிகரிக்கும் தற்போது வங்கிக் கடன் புத்தகத்தில் 40% வரை அரசின் ஆறு மாத கால அவகாசத்தின் கீழ் உள்ளன. அடுத்த ஆகஸ்ட் மாதம் தடை காலம் முடிவடையவுள்ள நிலையில், வாராக்கடன் நிச்சயம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2020 - 21ம் ஆண்டில் கார்ப்பரேட் துறை மற்றும் பொருளாதார துறையிலும் விழ்ச்சி காணக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இத்துறையில் சற்று அழுத்தம் அதிகரிக்கலாம் என்றும், இதன் அழுத்தம் வங்கிகளின் மீதும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகீறது.

إرسال تعليق