இனி ஆன்லைனிலேயே உங்கள் ரேசன் கார்டில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்…!!

 தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டது..

இந்நிலையில் அரசாங்கம் பணப்பரிவர்த்தனை, பென்ஷன் திட்டம், ரேஷன் கார்டு என அனைத்தையும் தற்பொழுது தொழில்நுட்ப மயமாகி உள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் நம்முடைய வேலைகள் இன்னும் எளிதாக முடிந்து விடுகிறது.

எனினும் குடும்ப அட்டையில் உள்ள குளறுபடிகளை எப்படி சரிசெய்வது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. முக்கியமாக ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். என்றால் நாம் அதிகாரிகளிடம் சென்று காத்திருக்க வேண்டிய தேவையில்லை.

ஆன்லைனிலேயே நாம் அதை பூர்த்தி செய்துகொள்ளலாம் அதனை எப்படி என்பது பார்க்கலாம்.

உங்கள் மொபைலில் முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அதில் பயனாளர் நுழைவு என்பதை கிளிக் செய்ய வேண்டும்..

பிறகு ஸ்மார்ட் கார்ட்டில் பதிவு செய்யபட்ட மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அடுத்ததாக கேப்சாவை (CAPTCHA) பதிவு செய்து சமர்பித்தால் உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை(OTP) பதிவுசெய்யுங்கள்.

பின்னர் Smart card details என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். பிறகு Edit என்ற ஆப்ஷனை தேர்வு செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம்..

அதில் திருத்தம் செய்ய தேவையான ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.. இறுதியாக Submit என்பதை தேர்வு செய்யவும்.

இறுதியாக விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும்.

அந்த குறிப்பு எண் வைத்து நீங்கள் இணையதளத்தில் குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்.

பிறகு அந்த கார்டை வைத்து நீங்கள் நியாயவிலைக் கடைகளில் வழக்கம்போல பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

எந்த ஒரு பிரச்னையும் இருக்காது. மேலும் வேறு எதாவது சந்தேகம் இருந்த இணையதளத்தில் உள்ள இலவச எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post