இரவு 8 மணி செய்திகள்

 அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?

முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி கல்வி ஆணையருக்கு அறிக்கை அளிக்க உத்தரவு

அனகாபுத்தூர் அரசு பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்த வழக்கில் உத்தரவு


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்


தடுப்பூசி திட்டத்தில் புதிய சாதனை 40கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசிகள் இது வரை செலுத்தப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரத் துறை

சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை அனைத்து மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

அ.தி.மு.க ஆட்சியில் தினசரி சராசரியாக 61 ஆயிரம் தடுப்பூசிகளே போடப்பட்டன; தி.மு.க அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து தினமும் சராசரியாக 1.61 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


பாலியல் புகார் குறித்து மாணவ, மாணவிகள் புகார் தெரிவிக்க குழு அமைக்க வேண்டும்.

தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் அமைக்கவும் உத்தரவு

சமூக நல அதிகாரி, மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர், எஸ்.பி. அந்தஸ்து குறையாத பெண் காவல் அதிகாரி கொண்ட குழு - பரிந்துரை


சென்னை பெருநகரில் இடியுடன் கனமழை :

லேசான காற்றுடன் பல இடங்களில் பலத்த மழை

இராயப்பேட்டை,மேடவாக்கம்,வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை

இடியுடன் கூடிய கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்


தமிழ்நாட்டில் மேலும் 2,205 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் மேலும் 2,205 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது

தமிழ்நாட்டில் இன்று 2,802 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 43 பேர் பலி

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28,590ஆக சரிவு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 241ஆக சரிவு

சென்னையில் இன்று 137 பேருக்கு மட்டும் புதிதாக கொரோனா உறுதியானது

ஈரோடு மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது


Post a Comment

Previous Post Next Post