ஆகஸ்ட் 30 முதல் ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம்


சென்னையில் ஓ எம் ஆர் சாலை உள்ளிட்ட 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்பட உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் அடுத்த கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது, சென்னை திருவான்மியூர் ரயில் நிலையம் அருகே ஓ எம் ஆர் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

இங்கு ஓ எம் ஆர், பெருங்குடி, துரைப்பாக்கம் மற்றும் மேடவாக்கம் உள்ளிட்ட நான்கு சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளது.

தமிழக அமைச்சர் எ வ வேலு மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கியதால் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் இந்த சுங்கச் சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

Post a Comment

أحدث أقدم