தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் இன்று 1,990 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தமிழகத்தில் தற்போது 20,524 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 1,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,61,587 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,102 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 2,156 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,06,961 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 20,524 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Post a Comment

أحدث أقدم