தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு?.. அமைச்சர் அதிரடி...!!!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றது.
அதிலும் குறிப்பாக பெண்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகின்றது.
அதன்படி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும் பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு 2500 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் புதிய பேருந்து நிலையங்களில் அம்மா குடிநீர் பாட்டில் விற்பது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
إرسال تعليق