ஒரு ஏழை மாணவியின் மருத்துவ கனவை நடிகர் சிவகார்த்திகேயன் நனவாகியுள்ளார்.
இவர்களின் மகள் சஹானா. கஜாபுயல் பாதிப்பால், நல்ல மார்க் எடுத்த சஹானா நீட் தேர்வில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், சஹானாவுக்கு உதவி செய்ய நடிகர் சிவகார்த்திகேயன் முன் வந்தார்.
அவருடைய நீட் தேர்வு பயிற்சிக்கான செலவை ஏற்றுக் கொண்டு அந்த மாணவியை படிக்க வைத்துள்ளார்.
தற்போது, இந்த வருடம் நீட்டி தேர்வில் சஹானா வெற்றி பெற்றுள்ளார்.இது குறித்து மாணவி சஹானா கூறியதாவது
ஓர் ஏழை மாணவி MBBS படிக்க ஏணியாக இருந்த நடிகர் சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி.
தெய்வம் வேறில்லை. கஜா புயலால் சேதமடைந்த என் வீட்டில் மின்சார வசதி இல்லை.
சூரிய வெளிச்சத்திலும், பள்ளி அருகே இரவில் தெருவிளக்கு வெளிச்சத்திலும் படித்தேன். மருத்துவராக வேண்டும் என்று உறுதியுடன் நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தேன்.
என்னுடைய நிலையை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், தஞ்சாவூரில் உள்ள தனியார் நீட் பயற்சி மையத்தில் என்னை சேர்த்து, கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி பெற உதவி செய்தார்.
தற்போது, நடந்து முடிந்த நீட் தேர்வில் 273 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனது மருத்துவ கனவிற்கு உ யிர் கொடுக்க பலருக்கும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் மனமார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
إرسال تعليق