ஆஸ்திரியாவில் நள்ளிரவில் வீட்டு பாத்ரூமில் தண்ணீர் தானாக விழும் சத்தத்தை கேட்டு அங்கு சென்ற நபருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஆஸ்திரியாவில் நள்ளிரவில் வீட்டு பாத்ரூமில் இருந்து தண்ணீர் தானாக Flush ஆகும் சத்தத்தை கேட்டு அங்கு சென்ற நபர் அதிர்ச்சி அடைந்தார்.
தன் வீட்டு படுக்கையறையில் நள்ளிரவு நன்றாக தூங்கி கொண்டிருந்த அந்த நபருக்கு, தனது வீட்டு கழிவறையில் தண்ணீர் தானாக Flush ஆகும் சத்தம் நள்ளிரவில் கேட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், பயந்து கொண்டே பாத்ரூம் சென்றார்.
பாத்ரூமில் 6 அடி நீளமுள்ள கொடிய விஷப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அந்த காட்சியை கண்டவுடன் அவரின் கை, கால்கள் நடுங்க தொடங்கியது.
இதன் பின்னர் ஒரு வழியாக சுதாரித்து கொண்ட அவர் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அந்த பாம்பை பிடித்து சென்று காட்டுக்குள் பத்திரமாக விட்டனர்.
إرسال تعليق