தொடர்ந்து பாதிப்பில் தமிழகம் 3-ம் இடம்; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.48 லட்சத்தை தாண்டியது 16,475 பேர் பலி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,83,18-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 19,459 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 377 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 16,475 பேர் உயிரிழந்த நிலையில் 3,21,723 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,64,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7429 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 86,575 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் டெல்லி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லியில் 83,077 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2,623 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 52,607 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 82,275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1079 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 45,537 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில வாரியாக விவரம்:
அசாமில் 7206 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 5088 பேர் குணமடைந்தது.
பீகாரில் 9212 பேருக்கு பாதிப்பு; 60 பேர் பலி; 7118 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 429 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 336 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 2662 பேருக்கு பாதிப்பு; 13 பேர் பலி; 2091 பேர் குணமடைந்தது.
கோவாவில் 1198 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 478 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 31,320 பேருக்கு பாதிப்பு; 1,808 பேர் பலி; 22,800 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 13,829 பேருக்கு பாதிப்பு; 223 பேர் பலி; 8917 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 1,346 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 1079 பேர் குணமடைந்தது.
கேரளாவில் 4189 பேருக்கு பாதிப்பு; 22 பேர் பலி; 2152 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 17,271 பேருக்கு பாதிப்பு; 399 பேர் பலி; 13,611 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 2,364 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 1,793 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 963 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 586 பேர் குணமடைந்தது.
மணிப்பூரில் 1185 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 455 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 47 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 42 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 148 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 55 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 415 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 164 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 6,614 பேருக்கு பாதிப்பு; 21 பேர் பலி; 4743 பேர் குணமடைந்தது.
பாண்டிச்சேரி 619 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 221 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 5216 பேருக்கு பாதிப்பு; 133 பேர் பலி; 3,526 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 2,823 பேருக்கு பாதிப்பு; 38 பேர் பலி; 2018 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 13,190 பேருக்கு பாதிப்பு; 207 பேர் பலி; 7507 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 7093 பேருக்கு பாதிப்பு; 94 பேர் பலி; 4,316 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 14,419 பேருக்கு பாதிப்பு; 247 பேர் பலி; 5172 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 17,283 பேருக்கு பாதிப்பு; 639 பேர் பலி; 11,193 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 22,147 பேருக்கு பாதிப்பு; 660 பேர் பலி; 14,808 பேர் குணமடைந்தது.
ஆந்திரப்பிரதேசத்தில் 13,241 பேருக்கு பாதிப்பு; 169 பேர் பலி; 5,908 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 182 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 60 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 13,186 பேருக்கு பாதிப்பு; 557 பேர் பலி; 10,084 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 916 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 529 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 76 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 45 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 178 பேருக்கு பாதிப்பு; 60 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 88 பேருக்கு பாதிப்பு; 49 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
إرسال تعليق