உலகமே என் வீடு, வாழ்க்கை வாழ்வதற்கே, இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் சுற்றி பல்வேறு தரப்பட்ட மக்களோடு பழகி, பலதரப்பட்ட கலாசாரம், பண்பாடு போன்றவற்றை அறிந்து கொண்டு, கிடைத்த உணவை உண்டு, கிடைக்கும் இடத்தில் உறங்கி எழுந்து, கையில் காசே எடுத்துச் செல்லாமல் உலகம் முழுவதும் சுற்றி வரவேண்டும் என்ற லட்சியத்தோடு கிளம்பியுள்ளார் ஆந்திர பிரதேச மாநிலம், அனந்த்பூரைச் சேர்ந்த விமல் கீதானந்தன்.
இதுவரை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்குச் சென்றுள்ள இவருக்கு 5 மொழிகள் தெரியுமாம். மேலும், 7 மொழிகள் புரியுமாம்.
சாலையில் போவார் வருவோரிடம் லிப்ட் கேட்டே தன் பயணத்தை முதல் 2 ஆண்டுகளுக்குத் தொடர்ந்துள்ளார்.
யாராவது அன்பாக அளிக்கும் உணவை உண்டு, கிடைக்கும் இடத்தில் தூங்கி எழுந்து தன் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்.
மேலும் தனது பயண அனுபவம் குறித்து அவர் கூறுகையில், சில இடங்களில் 1 மாதம் , 2 மாதம் கூட தங்கியிருப்பேன்.
சில இடங்களில் ஓர் நாள் கூட தங்க மாட்டேன். என் மனதுக்கு பிடித்ததைச் செய்து, மனதின் போக்கில் பயணிக்கிறேன்.
அம்மா, தங்கை என எளிய சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு, இவரது குடும்பத்தினர் இவரின் உலகம் சுற்றும் பயணத்துக்கு முழு ஓத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
திருமணத்திலோ, எதிர்காலத்தைப் பற்றியோ எவ்வித நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இல்லாத இவர் இன்றைய நாளை மட்டுமே நம்புகிறார். இன்று என்பது மட்டுமே நம் கையில் உள்ளது.அதனை முழுமையாக வாழ்ந்து முடிக்கவேண்டும் என்கிறார்.
மேலும், தற்போது அவர் ஒரு டெம்போ டிராவலரை’மாயா’ என பெயரிட்டு நகரும் வீடாக மாற்றியுள்ளார்.
டெம்போ டிராவலர் வாகனத்தை, ஓர் நபர் குடியிருக்கத் தேவையான அளவுக்கு அதனை ஓர் ஹால், பெட்ரூம், சமையலறை என பிரித்து ரெடி செய்து அதனைக் கொண்டு நாடு முழுவதும் சுற்றி வருகிறார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,
இளைஞர்கள் பரந்து விரிந்த சிந்தனையுடன், உலகையே வெல்லத் துடிக்கும் காலமிது.
அதனால்தான் தன் வீடு, தன் குடும்பம் என இல்லாமல் உலகையே தன் வீடாகக் கொண்டு உலகம் முழுவதையும் சுற்றி வந்து, உலகையே அறிந்து கொள்ளும் ஆவலில் பயணிக்கும் விமலின் பயணம் முழு வெற்றியடைய அனைவரும் மனமாற வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.
Post a Comment