தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 4,5,6 ஆகிய தேதிகளிலும், நீலகிரி, கோவை மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும். சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment