கர்நாடகா ADGPயின் முக்கிய அறிவிப்பு!

கர்நாடகத்திற்குள் நுழைய கரோனா சான்றிதழ் கட்டாயம்: ஏடிஜிபி

கர்நாடக மாநிலத்திற்குள் நுழைவதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் என மாநில ஏடிஜிபி பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், கர்நாடக மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக ஏடிஜிபி கூறுகையில், "மாநிலத்தில் கொரோனா உறுதியாகும் விகிதம் மெதுவாக அதிகரித்து வருகின்றது. இந்த சூழல் தீவிரமடையாமல் தடுக்க, கர்நாடகத்திற்குள் வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ அவரசத்திற்காகவும், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post