சுதந்திர தின விழா: சென்னை கடற்கரை சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்…!

சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி, ஒத்திகை நடைபெறவதால், சென்னை கடற்கரை சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் சுதந்திர தினவிழாவன்று முதல்வர் ஸ்டாலின் கொடியேற்ற உள்ளார. தலைமைச்செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கான காவல்துறை ஒத்திகை நடைபெற உள்ளது- இதை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி,காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.

நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை,போர் நினைவுச்சின்னம் முதல் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையின் வடக்கு பகுதி வரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,காமராஜர் சாலை, ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம் வழியாக செல்லும் வகையிலும்,அதேபோல் பாரிமுனை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் வடக்கு கோட்டை பக்கசாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக செல்லும் வகையிலும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

மேலும்,அண்ணாசாலையில் இருந்து கொடி மரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜாஅண்ணாமலை மன்றம், என்.எப்.எஸ். சாலை வழியாகவும்,முத்துசாமி சாலையில் இருந்து காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post