சென்னை: நாளை தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற உள்ள கலைவாணர் அரங்கை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
தமிழக நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, காகிதமில்லா இ-பட்ஜெட்டை முதன்முறையாக தாக்கல் செய்கிறது.
தமிழக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். அதற்காக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள கலைவாணர் அரங்கத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் இ-பட்ஜெட்டை காணும் வகையில் அவர்களின் இருக்கைகளில் கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள அரங்கத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
إرسال تعليق