டெல்லி: தமிழ்நாட்டில் 8 காவல்துறை அதிகாரிகள் உள்பட 152 காவல் அதிகாரிகளுக்கு மத்தியஉள்துறை அமைச்சரின் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் 28 பேர் பெண் போலீஸ் அதிகாரிகள், அவர்களில் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட 152 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், தமிழகத்தில் 8 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விருது கடந்த 2018ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அகுற்றவியல் விசாரணையின் உயர் தொழில்முறை தரங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், விசாரணை அதிகாரிகளின் புலனாய்வு சிறப்பை அங்கீகரிக்கும் நோக்கத்துடனும் இந்த விருது வழங்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான “மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கத்திற்கான சிறப்புப் பதக்கம்” 152 காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலின்படி,
சிபிஐ அதிகாரிகள் 15 பேர் பதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும்,
மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையிலிருந்து தலா 11 பேர்,
உத்தரபிரதேசத்தில் இருந்து 10 பேர்,
9 பேர் கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 9 பேர்,
8 பேர் தமிழக காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
7 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள்
தலா 6 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
கர்நாடகா மற்றும் டெல்லி காவல்துறை மற்றும் மற்ற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து மீதமுள்ளவை. இவர்களில் இருபத்தி எட்டு (28) பெண் போலீஸ் அதிகாரிகள் அடங்குவர்.
தமிழகத்தில் விருது பெறுபவர்கள் விவரம்:
1) எம்.சரவணன் , இன்ஸ்பெக்டர்
2) திருமதி அன்பரசி, இன்ஸ்பெக்டர்
3) திருமதி கவிதா, இன்ஸ்பெக்டர்
4) ஆர்.ஜெயவேல், இன்ஸ்பெக்டர்
5) திருமதி கலைச்செல்வி, இன்ஸ்பெக்டர்
6) ஜி.மணிவண்ணன், இன்ஸ்பெக்டர்
7) பி.ஆர்.சிதம்பரம் முருகேசன், இன்ஸ்பெக்டர்
8) திருமதி சி.கண்மணி, இன்ஸ்பெக்டர்
إرسال تعليق