நடிகர் விஜய் வீட்டின் முன் பரபரப்பு.! சம்பள பாக்கி., குடும்பத்துடன் கைது.!
சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டு முன்பு குடும்பத்துடன் சந்திக்க சென்ற விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
நடிகர் விஜயை சந்திக்க, விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி ஒருவர் தனது குடும்பத்துடன், சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று பின்னர் விடுவித்துள்ளனர்.
விஜய் மக்கள் இயக்கத்தின் துணை செயலாளராக இருந்த குமார், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் குமார் சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வந்தார்.
அப்போது நடிகர் விஜயை சந்திக்க வேண்டும் என்று கூறி உள்ளார். ஆனால் அவரை சந்திக்க விஜய் மறுத்து உள்ளதாக தெரிகிறது.
அதன் பின்னரும் அவர் வீட்டின் முன்பே நின்றுள்ளார். இதனை அடுத்து போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அப்போது போலீசாரிடம் தான் சம்பள பணத்தை வாங்குவதற்காக வந்ததாக தெரிவித்துள்ளார் குமார். இதனையடுத்து போலீசார் அவரை அனுப்பி வைத்தனர்.
Post a Comment