மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் படகு சவாரி துவக்கம்

மதுரை: 
மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சேவை தொடங்கப்பட்டது.
மதுரையின் முக்கிய சுற்றுலாத் தலமான மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெற்று வந்த படகு சவாரி, கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் உள்ள படகு குழாம்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ஆனால், மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் இன்னும் படகு சவாரி தொடங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சேவை தொடங்கப்பட்டது. இந்த படகு சவாரி சேவையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது. மதுரை மாநகராட்சியும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post