மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தபோது மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
தற்போது அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாக கூறிய நிலையில், மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர். அதன்படி அமித் ஷாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் உடல்நிலை சீராக இருப்பதாக அமித் ஷா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருக்கிறார்.
Post a Comment