டில்லி செல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்… மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சு..!

 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின் சமீபத்தில் டில்லி சென்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.


அப்போது, தமிழகத்துக்கு தேவையான நிதிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஒரு சில நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் தற்போது மீண்டும் பிரதமரை சந்திக்க டில்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் பூதாகரமாக எழுந்து வருகிறது.

மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில அரசும், மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என தமிழக அரசும் மாறி மாறி பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா டில்லி சென்று பிரதமர் மோடியை மேகதாது அணை விவகாரம் குறித்து சந்திக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனை அடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய டில்லி செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த நாட்களில் கர்நாடகம் மற்றும் தமிழக முதல்வர்கள் பிரதமர் மோடியை மேகதாது அணை விவகாரத்திற்காக சந்திக்க உள்ளனர் என்பதால், இந்த விவகாரத்தில் பிரதமர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Post a Comment

Previous Post Next Post