இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் மு.க ஸ்டாலின் தான் என உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து பெருமைப்பட்டார்.
சென்னையில் உள்ள ஆவடியில் அமைச்சர் நாசர் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்புவிழாவில் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு நடைபெற்று முடிந்ததும், அங்கிருந்த தொண்டர்களிடையே உரையாற்றினார்.
இதுதொடர்பான உரையில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ” கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்கள் அனைவரையும் தயங்காமல் செலுத்திக்கொள்ள வேண்டும்.
இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் யார்? என்று ஓர்மக்ஸ் வாக்கெடுப்பு (Ormax poll) தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சிறந்த முதல்வர் போன்ற முதலிடத்தில் இடம்பெற்றுள்ளார்.
மாதம் ஒருமுறை நடத்தப்படும் ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டரை மாதங்கள் மட்டுமே ஆகிறது.
இந்த மாதத்திற்கான சிறந்த முதல்வர்களின் பட்டியலில் முதலிடத்தில் மு.க ஸ்டாலின் இருக்கிறார் ” என்று கூறி பெருமைப்பட்டார்.
முன்னதாக, பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தையும் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Post a Comment