இன்று கர்நாடகா,ஆந்திரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

பெங்களூரு

இன்று கர்நாடகாவில் 1,298 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
கர்நாடகாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 29,81,827 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 32 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 37,039 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,833 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 28,71,448 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,481 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 19,95,669 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை 13,671 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,929 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 19,65,657 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,341 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

 

Post a Comment

Previous Post Next Post